Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் - நள்ளிரவில் விபரம் வெளியீடு


நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்  எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் செய்துள்ளது.


அதனடிப்படையில்  ஒக்டேன் 92 ரக பெட்ரோல் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 346 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு அதன் புதிய விலை 426 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒட்டோ டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 329 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


சுப்பர் டீசல் 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மண்ணெண்ணெய்யின்  விலை 2  ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 247 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




No comments