Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

பேரவாவி பகுதி நவீன பொழுது போக்கு பிரதேசமாக்கப்படும் - ஹரீன் பெர்னாண்டோ தெரிவிப்பு

கொழும்பு பேரவாவி பிரதேசத்தை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பிரதேசமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்குகமைய இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.


கொழும்பு பேரவாவி பகுதி தலைநகரத்தின் ஒரு முக்கியமான பொழுதுபோக்கு பிரதேசமாக மாற்றப்படும்.


சிங்கப்பூரின் கிளார்க் குவே நதியில் நடைமுறையில் உள்ள கேளிக்கை சிறப்பம்சங்கள், உணவக வசதிகள் மற்றும் சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு அம்சங்கள், இந்த பேரவாவி பொழுது போக்குப்பிரதேசத்தில் உள்ளடக்கப்படும் என்றும் அவமைச்சர் தெரிவித்துள்ளார். (லோரன்ஸ் செல்வநாயகம்)




No comments