Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

03 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள் - அதிர்ச்சித் தகவல்


டெங்கு வேகமாகப் பரவி வருவதைக் குறிக்கும் வகையில், கடந்த மூன்று நாட்களில் இலங்கையில் சரியாக 1,000 பேர் டெங்கு நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.


அதன்படி, நாளொன்றுக்கு சுமார் 300 நோயாளர்கள்  பதிவு செய்யப்படுகின்றனர்.


இந்த நிலையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் (NDCU) பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன கருத்து வெளியிடுகையில் நாடு மீண்டும் ஒரு நாளைக்கு சராசரியாக 250 நோயாளர்கள் பதிவாகும் நிலைக்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.


தற்போது நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


எனவே, டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கவும், நுளம்பு  உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.


2023 ஆம் ஆண்டில் மொத்தம் 77,487 நோயாளர்கள்  பதிவாகியுள்ளனர் , இதில் 16,363 நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளன.


இதேவேளை மேல் மாகாணத்தில் 36,266 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)


No comments