தாய்லாந்தின் பிரச்சுவாப் கிரிகான் மாகாணத்தில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில், அது பாதியாகப் பிளந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தாய்லாந்தில் பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியதில் 14 பேர் பலியாகியதுடன், 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர்.
தாய்லாந்தின் மேற்கு மாகாணமான பிரசுவாப் கிரிகான் பகுதியில் நள்ளிரவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
ஓட்டுநருக்கு போதுமான தூக்கம் இல்லாத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டு பொலிஸார்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments