முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இலங்கையின் பிள்ளைகள் 21 வயதை அடையும் போது பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்ய முடியும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதன் மூலம் ஒரு பிள்ளை 17 வயதை அடையும் போது பல்கலைக்கழகத்திற்குள் நுழைய முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை ஆரம்பக் கல்விக்கான புதிய நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் எனவும் கல்வி அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)
No comments