Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

நாட்டை விட்டு வெளியேறிய வைத்தியர் - 50 அறுவைச் சிகிச்சைகள் இடை நிறுத்தம்


தெஹியத்தகண்டி யின் ஆதார வைத்தியசாலையில் கடமை புரிந்த ஒரேயொரு சத்திர சிகிச்சை நிபுணரும் 

நாட்டை விட்டு வெளியேறியதால், சகல சத்திரசிகிச்சைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதனால்  நோயாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதோடு தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலை நெருக்கடியையும்  எதிர்நோக்கியுள்ளது.


இந்த விடயம் தொடர்பில், மருத்துவமனை பணிப்பாளரால், சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை தெரிவிக்கப்படுகிறது.


அவசர அறுவை சிகிச்சை உட்பட 50 அறுவை சிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொலன்னறுவை வைத்தியசாலை உட்பட அருகாமையிலுள்ள வைத்தியசாலைகளுக்கு நோயாளர்கள் அனுப்பப்பட்ட போதிலும், அந்த வைத்தியசாலைகளில் நிலவும் நெரிசல் காரணமாக நோயாளர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, மருத்துவமனைப் பணிப்பாளர், அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த நெருக்கடியான சூழ்நிலைக்கு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப் படுகின்றமை குறிப்பிடத் தக்கது. (DM)


No comments