Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

88 இலங்கையர் தொடர்பில் இன்டெர்போல் எச்சரிக்கை


பாரிய குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 88 இலங்கையர்கள் தொடர்பில் இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸார் எச்சரிக்கை அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளனர்.


இந்த 88 இலங்கையர்களும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு நாட்டை விட்டு தப்பிச்சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த இலங்கையர்களுக்கு எதிராக இன்டர்போல் நீல அறிவிப்பினை வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் இலங்கை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.



இதேவேளை, இலங்கையிலிருந்து தப்பிச்சென்ற 41 போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.


சிவப்பு எச்சரிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு இந்தியாவில் வழக்குத் தொடரப்பட்டுள்ள 9 இலங்கையர்களுக்கு எதிரான விசாரணைகளின் நிறைவில் அவர்கள் இலங்கை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.  (LSN)


No comments