Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

க.பொ.த. (உ/த) பரீட்சைகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு


கல்விப்  பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள,  பாடசாலை பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் பாடசாலை அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் என  பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, தனியார் பரீட்சார்த்திகளுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் விசேட அறிவிப்பொன்றின் மூலம் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அத்தோடு இவர்களுக்கான பரீட்சை கால அட்டவணையும் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2023ஆம் கல்வி ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 04ஆம் திகதி தொடக்கம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 


இந்நிலையில், பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் இருப்பின் அவர்கள் பரீட்சைகள் திணைக்களத்தின்  www.doenets.lk என்ற இணையத்தளத்தில் இருந்து தமக்கான அனுமதி அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என திணைக்களம் அறிவித்துள்ளது. 


No comments