நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில், மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
போஞ்சி, கரட், லீக்ஸ், மற்றும் முள்ளங்கி போன்ற மரக்கறிகள் கிலோ ஒன்று 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஒரு கிலோகிராம் தக்காளி 500 ரூபாவாகவும் ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை விசேட பொருளாதார மையங்களிலும், கொழும்பு மரக்கறி சந்தையிலும் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
எனினும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்யப்படுகின்ற விலையை விட அதிகரித்த விலையிலேயே மரக்கறிகள் விற்கப்படுவதாக குற்றம் சுமத்தப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments