யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.
இச் சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில் வெளியானதாகவும் அந்தச் செய்தியை உடனடியாக இணையத்தளத்திலிருந்து அகற்றும்படியும் கூறியே இனந்தெரியாதோர் குறித்த ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
2 ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் ஊடகவியலாளர் மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற போது வீதியில் சென்றவர்கள் திரண்டதால் அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்களில் 6 பேர் கொண்ட பெண்கள் குழுவும் இருந்துள்ளார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (LSN)
No comments