ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய பொது மாநாடு இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ, அமைச்சர்கள் மற்றும் அனைத்து ஆதரவு கட்சித் தலைவர்களும் இதில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
இதற்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாட்டின் ஒவ்வொரு தொகுதியையும் பிரதிநிதித்துவப்படுத்தி 5000க்கும் அதிகமானோர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பங்களிப்பு மற்றும் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இங்கு அறிவிக்கப்பட உள்ளதாக கட்சியின் ஸ்தாபகரும் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். (LSN)
No comments