இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படைகளுக்கு பெண்கள் தலைமை தாங்குவார்கள் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமிதா பண்டார தென்னகோன் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"இராணுவத்தில் ஒரு பெண் மேஜர் பதவியை மட்டுமே பெற முடியும்,எவ்வாறாயினும், முப்படைகளுக்கும் பெண்கள் தலைமை தாங்கும் வகையில் இராணுவ சட்டங்களை மாற்றுவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது, என குழு நிலை விவாதத்தின் போது அமைச்சர் கூறினார்.
“இலங்கை இன்னும் பல அம்சங்களில் பெண்களுக்கு சம அந்தஸ்தை வழங்கவில்லை. புனித வில்வ மரக்கன்றுகளை அனுராதபுரத்திற்கு கொண்டு வந்தவர் பிக்குனி சங்கமித்தா. எவ்வாறாயினும், ஸ்ரீ மஹா போதியின் உடுமலுவாவிற்குள் பெண்கள் எவரும் அனுமதிக்கப்படுவதில்லை. ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாவலரான தியவதன நிமலேவை தெரிவு செய்யும் போது பெண் மாவட்டச் செயலாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை கிடையாமல் இருந்தது. எனவே இந்த மரபுகளை மாற்ற வேண்டிய நேரம் இது,'' என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (DM)
No comments