மருதானை புகையிரத நிலையத்தின் கூரையில் இருந்து இன்று காலை தவறி விழுந்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த நபர் 5 மற்றும் 6 ஆம் தளங்களை இணைக்கும் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபரை கீழே இறக்குவதற்கு மருதானை பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காத நிலையில், முற்பகல் 11.20 மணியளவில் குறித்த நபர் மேற்கூரையில் சென்று கொண்டிருந்த போது கீழே விழுந்துள்ள நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மருதானை போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (DM)
No comments