நாடளாவிய ரீதியிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள், வர்த்தக நிலையங்களில் வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
இதற்கமைய, தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் வெங்காயம் 400 ரூபா முதல் 470 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 400 ரூபாவிற்கும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியா வெங்காயம் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளமையே இதற்கான காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பெரிய வெங்காய விவசாயிகள் பலர் விளைச்சலுக்குரிய விலை கிடைக்காமை, உரிய நேரத்தில் உரம், கிருமிநாசினி கிடைக்காமை உள்ளிட்ட காரணங்களினால் தற்போது பெரிய வெங்காய உற்பத்தியிலிருந்து விலகியுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. (LSN)
No comments