Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

யாழில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது


 


யாழ்ப்பாணம் - பழைய பூங்கா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

பழைய பூங்கா அருகில் பொலிஸார் வீதித் தடைகளை அமைத்து போராட்டகாரர்களை தடுத்து வைத்துள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பேருந்தில் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகத்துக்கு வெளியே நீர்த்தாரை பிரயோகிக்கும் இயந்திரம், கலகமடக்கும் படை, பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (04) உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார். (AD)



-யாழ். நிருபர் பிரதீபன்-


No comments