இலங்கை சந்தைக்கு மீண்டும் கார்களை இறக்குமதி செய்ய தயாராகி வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 1000சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட கார்கள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.
வெளிநாட்டு கையிருப்பை நிலையாக பராமரித்துச் செல்லவே குறைந்த பட்ச இயந்திர திறன் கொண்ட கார்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மீண்டும் கார்களை இறக்குமதி செய்வது வருமான வரியை உயர்த்துவதன் நோக்கங்களில் ஒன்றாகும் என்று சங்கம் மேலும் கூறுகிறது.
மேலும், கார்கள் இறக்குமதிக்கு தேவையான பணிகள் ஒருமாத குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (AD)
No comments