Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வெற்றிபெற்றும் இந்திய வீரர்களை திட்டிய ரோகித் சர்மா


இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இங்கிலாந்து அணி வெற்றிபெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில் 292 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது.


இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த இந்திய அணியின் பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதல் போட்டியில் தோல்வியடைந்தாலும் இரண்டாவது போட்டியில் தரமான கம்பேக்கை கொடுத்துள்ளது இந்திய அணி. 3வது டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 10 நாட்கள் உள்ள நிலையில், காயமடைந்த கேஎல் ராகுல், ஜடேஜா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பும் போது கூடுதல் பலம் பெறும்.


இந்த நிலையில் இந்திய அணி வெற்றிக் குறித்து கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், பும்ரா எப்போதும் இந்திய அணியின் சாம்பியன் பவுலர். இதுபோன்ற ஒரு ஆட்டத்தில் வெற்றிபெறும் போது அனைத்து வீரர்களின் செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். இந்திய அணி 2 இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளது. ஏனென்றால் இதுபோன்ற பிட்சில் விளையாடி வெற்றிபெறுவது எளிதல்ல. அதன்பின் பவுலர்கள் சிறப்பாக திட்டங்களை செயல்படுத்தி ஆட்டத்தை திருப்பினார்கள். 

யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பொறுத்தவரை அவர் சிறந்த வீரராக தெரிகிறார். அவரின் ஆட்டத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். ஆனால் இன்னும் நீண்ட தூரம் அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. இந்திய அணிக்காக அவர் செய்ய வேண்டியவை ஏராளம் உள்ளது. கடைசி வரை இதேபோல் பணிவுடன் இருப்பார் என்று நம்புகிறேன். அதேபோல் இந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச். ஆனால் எங்களின் பேட்ஸ்மேன்கள் பலரும் நல்ல தொடக்கம் கிடைத்து விக்கெட்டை இழந்திருக்கிறார்கள்.


அதனை நிச்சயம் கவனிக்க வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் இளம் வீரர் என்பதோடு, அணிக்கு புதியவர்கள். டெஸ்ட் கிரிக்கெட்டை அதிகமாக விளையாடிய அனுபவம் இல்லாதவர்கள். அதனால் அவர்களுக்கு மனதளவில் நம்பிக்கை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. அவர்கள் எந்த சூழலிலும் அழுத்தமின்றி விளையாட வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக இங்கிலாந்து அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. அதனால் டெஸ்ட் தொடரின் தொடக்கத்திலேயே எளிதாக இருக்க போவதில்லை என்று புரிந்து கொண்டேன் என்று கூறியுள்ளார்.




No comments