Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இளம் ஊடகவியலாளர்கள் பலருக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிப்பு

பிறைநிலா ஊடக வலையமைப்பின் பிரமாண்டமான முதலாவது சான்றிதழ் வழங்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (2024.02.18) நடைபெற்றது.


பிறைநிலா ஊடக வலையமைப்பின் பணிப்பாளரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான சப்ராஸ் அபூபக்கர் தலைமையில் நிகழ்வு கண்டி, பொல்கொல்ல தேசிய கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.


2016 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிறைநிலா ஊடக வலையமைப்பானது வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனமாகவும், அரச ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனமாகவும், குளியாபிடிய கிழக்கு பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட கல்வி நிறுவனமாகவும் கடந்த 08 வருடங்களுக்கு மேலாக ஊடகத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்து கொண்டிருக்கின்றது.



அதனடிப்படையில் நாடுபூராகவும் இருக்கும் இளம் ஊடக ஆர்வலர்களை இனங்கண்டு அவர்களுக்கான ஊடகத்துறைசார் பயிற்சிப் பட்டறைகளையும் தொழில்வழிகாட்டலையும் மிக நேர்த்தியாக முன்னெடுக்கிறது.


Advanced Certificate in Photography, 

Advanced Certificate in Mass Media (Online),

News Reading Workshop 

Online Graphic Design


போன்ற கற்கைநெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ்களே கடந்த வாரம் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.



இதேவேளை ஒன்லைன் மூலமான அல்குர்ஆன் கற்கைநெறியை நிறைவு செய்து 03 மாதங்களில் அம்ம ஜுஸுவை மனனம் செய்த மாணவர்களும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தனர்.


நாடுபூராகவுமிருந்து கற்கைநெறியை நிறைவு செய்த சுமார் 60 ற்கு மேற்பட்ட மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


இந்நிகழ்வில் கடந்த ரமழானில் பிறைநிலா ஊடக வலையமைப்பு நடாத்திய கிராஅத் போட்டியில் வெற்றியீட்டிய வெற்றியாளருக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு "பிறைநிலா கேள்வி உலா" வில் பங்குபற்றி வெற்றியீட்டிய வெறனனியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


அதேபோல் பிறைநிலா ஊடக கல்லூரியின் முதல் பிரிவு மாணவர்களும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு, ஒவ்வொரு குழுவிலும் மிகச் சிறந்த திறமையானவர்கள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன.



நிகழ்வில் சிறப்பதிதியாக பிரபல தொழிலதிபரும், பிறைநிலா ஊடக வலையமைப்பின் செயலாளருமாகிய ரிப்கான் அவர்களும், கௌரவ அதிதியாக சிரஷே்ட புகைப்படக் கலைஞரும், புகைப்பட சங்கத்தின் உருப்பினறுமாகிய திரு. சீனு ராம்தாஸ் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







No comments