பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்றும்(28) நாளையும்(29) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
சம்பளப் பிரச்சினையை சுட்டிக்காட்டி இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளது.
தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்கக் கோரி பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்கள் அண்மைக்காலமாக பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
எவ்வாறாயினும், அண்மையில் அரசாங்கம் பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை மாத்திரம் அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (NF)
No comments