Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அதிவேக நெடுஞ்சாலைகள் முகாமைத்துவம் தொடர்பில் பந்துல கருத்து


அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகளின் முகாமைத்துவம் ஒருபோதும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போhதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


நெடுஞ்சாலை நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதாகவும், அந்த நிறுவனம் 100 வீதம்  அரசாங்கத்திற்கு சொந்தமானதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் திறைசேரிக்கே அதன் முழு உரிமையும் உண்டு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


அதிவேக நெடுஞ்சாலைகள் இலாபகரமானவை அல்ல, ஆனால் பெரும் கடன் நெருக்கடிகளைக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் இலங்கையில் மறுசீரமைக்கப்பட்டு சேமிக்கப்பட வேண்டிய நிறுவனங்களான வீதி அபிவிருத்தி அதிகார சபை, எயார் லங்கா நிறுவனம், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்கள் நெருக்கடியில் உள்ளன. இதிலிருந்து மீள்வதற்கு தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ மூலோபாய முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார். (news.lk)




No comments