Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

கொத்தாக விக்கட்கள் வீழ்கிறது - மனமுடைந்த பஞ்சாப் அணித்தலைவர்


ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் பஞ்சாப் அணி தற்போது தங்களுடைய ஆறாவது தோல்வியை தழுவி இருக்கிறது. விளையாடிய எட்டு போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று ஆறு போட்டிகளில் தோல்வியை தழுவி 4 புள்ளிகள் உடன் தற்போது அந்த அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது.


இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணி கடைசி வரை போராடினாலும் பேட்டிகள் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது தோல்விக்கு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் கேப்டன் ஷாம் கரன் அந்த அணி வீரர்களை கடுமையாக சாடி இருக்கிறார்.


இது குறித்து பேசிய அவர், எங்களுடைய அணி வீரர்கள் பந்துவீச்சில் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். நாங்கள் பத்து முதல் 15 இடங்கள் குறைவாக அடித்து விட்டோம் என நினைக்கிறேன். குஜராத் அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.


குறிப்பாக தமிழக வீரர் சாய் கிஷோர், சிறப்பாக பந்து வீசினார். இந்த ஆடுகளத்தில் நாம் 160 இல்லை 170 ரன்கள் அடித்திருந்தால் வெற்றியை பெற முடியும் என்று நம்பினேன். மேலும் நாங்கள் பந்து வீசிய முறையை பார்த்து எங்களுக்கு வெற்றி கிட்டும் என நினைத்தேன். பேட்டிங்கில் நாங்கள் கொத்தாக விக்கெட் இழக்கின்றோம்.


அதுவே தோல்விகளுக்கு காரணமாக அமைகிறது. என்ன செய்தால் இதை தடுக்க முடியும் என்று தெரிய வேண்டும். ஐபிஎல் போன்ற தொடர்களில் இது போன்ற தொடர்ந்து போட்டிகளை தோற்க முடியாது என்று ஷாம்கரன் கூறினார். இதனை தொடர்ந்து பேசிய குஜராத் கேப்டன் கில், இந்த போட்டியை நாங்கள் விரைவாக முடிக்க நினைத்தோம்.


ஏனென்றால் இரண்டு புள்ளிகள் மட்டுமல்லாமல் ரன் ரேட் மிகவும் முக்கியமாக இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நான் வெறும் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டும் என்று தான் நினைத்தேன். கேப்டன்சி குறித்து பெரியதாக யோசிக்கவில்லை என்று கூறினார். இன்றைய ஆட்டத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியது ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவர் ஆட்டநாயகன் என்பதையும் வென்றார்.



No comments