இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலை தொடர்ந்து வானில் பறந்த அமெரிக்க வான்படையும் Boeing KC-135 ரக அமெரிக்க விமானமும் அவசரமாக ஈராக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவின் பாதுகாப்பு சபை அவசரமாக கூட்டியுள்ளதுடன் இஸ்ரேலின் பாதுகாப்பு சபையும் கிழக்கு அடி பங்கரில் கூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு சபையினர் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஈரானின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேலை சுற்றியுள்ள நாடுகளின் வான் பரப்பு பொது மக்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கண்டித்துள்ளார். சைபிரஸிலுள்ள பிரித்தானியாவின் வான் படை விமானங்கள் ஈரானின் வான்படை விமானங்களை சுட்டு வீழ்த்தும் நோக்குடன் புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் விமானம் தாங்கி கப்பலிலிருந்து புறப்பட்ட விமானங்களும் ஜோர்டானின் விமானங்களுக்கு ஈரானின் தற்கொலை விமானங்களில் இருந்து இஸ்ரேலை பாதுகாப்பதற்காக வானில் பறந்தபடி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதல் பலமணி நேரம் நீடிக்கலாம் என அமெரிக்காவின் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. இதேவேளை ஜோர்டான் தமது நாட்டில் அவசரகாலநிலையை பிரகடனம்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஈரான் நீண்ட தூர தற்கொலை தாக்குதல் விமானங்களுடன் ஏவுகணை விமானங்களையும் பயன்படுத்தியுள்ளது. இவ்வாறு இரண்டையும் கலந்து தாக்குதல் நடத்துவதனூடாக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு பொறிமுறையை குழப்பும் திட்டத்தை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி சிரியாவிலுள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் ஈரானின் மூன்று முக்கிய ஜெனெரல்கள் கொல்லப்பட்டதிற்கு பதிலடியாகவே ஈரான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
400 தொடக்கம் 500 வரையிலான தாக்குதல் விமானங்களை ஈரான் ஏவியுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
ஈரானின் இலக்குகளாக இஸ்ரேலின் பாதுகாப்பு மையங்கள்,அரச திணைக்களங்கள் காணப்படலாம் என அமெரிக்க தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரேல் அல்லது அதன் கூட்டணி நாடுகள் பறப்பதற்கு எந்த நாடாவது அதன் வான் பரப்பை திறந்துவிட்டால் மிக கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது இந்த தாக்குதல்களை தொடர்ந்து டிஜிட்டல் நாணயம்(Digital currency) பெறுமதி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ள பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சியை காணும் எனவும் கூறப்படுகின்றது.
No comments