Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

டி20 உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்த உகாண்டா


பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் பப்புவா நியூ கினியாவை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் உகாண்டா வீழ்த்தி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.



2024 டி20 உலகக் கிண்ணம், பிரிவு சி ஆட்டத்தில் பந்துவீச்சை தெரிவு செய்த உகாண்டா வெறும் 77 ஓட்டங்களில் பப்புவா நியூ கினியாவை கட்டுப்படுத்தியது. ஆனால் 7 விக்கெட்டுகளை இழந்து, டி20 உலகக் கிண்ணத்தில் தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.


உகாண்டா தரப்பில் அல்பேஷ் ரம்ஜானி, காஸ்மாஸ் கியேவுடா, ஜுமா மியாகி, பிராங்க் நசுபுகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  


அத்துடன் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான முதல் வெற்றி. பப்புவா நியூ கினியா சார்பில் லெகா சியாக்கா 17 பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களும், ஹிரி ஹிரி 19 பந்துகளை எதிர்கொண்டு 15 ஓட்டங்களும், கிப்ளின் டோரிகா 20 பந்துகளை எதிர்கொண்டு 12 ஓட்டங்களும் எடுத்தனர்.


எஞ்சியவர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 19.1 ஓவர்களில் மொத்தம் 77 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தனர். இதனையடுத்து 78 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உகாண்டா அணியில்,


ரியாசத் அலி ஷா 56 பந்துகளை எதிர்கொண்டு 33 ஓட்டங்களும் ஜுமா மியாகி 16 பந்துகளை எதிர்கொண்டு 13 ஓட்டங்களும் சேர்க்க, எஞ்சியவர்கள் ஒற்றை இலக்கங்களில் ஆட்டம் இழந்தனர்.



இறுதியில் 18.2 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 78 ஓட்டங்கள் குவித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்தது உகாண்டா. 




No comments