Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

அரச ஊழியர்கள் சிலருக்கு 25,000 ரூபா வரை சம்பளம் அதிகரிக்கிறது

 


அரச சேவையின் நிர்வாக சேவை பிரிவு அதிகாரிகளுக்கு இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதுவரை கால சேவையின் அடிப்படையில் வழங்கப்பட்ட விசேட கொடுப்பனவுக்குப் பதிலாக, சேவையின் கால அளவைப் பொருட்படுத்தாமல் 25,000 ரூபா விசேட மாதாந்த கொடுப்பனவாக வழங்குவதற்கு கடந்த (24 ஆம் திகதி) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இந்த கொடுப்பனவு  இலங்கை பொறியியல் சேவை,  இலங்கை கட்டிடக்கலை சேவை மற்றும் இலங்கை நில அளவையாளர் சேவை அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான சுற்றறிக்கை பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவின் கையொப்பத்துடன் அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த சுற்றறிக்கை திறைசேரியின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த சுற்றறிக்கையின் விதிகள் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (LSN)



No comments