Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

விராத் கோலி, ரோஹித் ஷர்மா ஆகியோரின் முடிவில் கதிகலங்கிய கிரிக்கட் ரசிகர்கள் - சங்கதி இது தான்


சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தன்வசப்படுத்தி உள்ளது.

இறுதிப் போட்டியில் 76 ஓட்டங்கள் எடுத்த விராட் கோலி, ஆட்ட நாயகன் விருதை வென்றார். அப்போது, இது தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அவர் அறிவித்து, ஓய்வு பெற்றார்.


இதுதான் என்னுடைய கடைசி டி20 உலக கோப்பை போட்டி. உலக கோப்பை வெல்ல வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டேன். அது தற்போது நனவாகியுள்ளது.

இனி இது அடுத்த தலைமுறை வீரர்களுக்கான நேரம், டி20 யை அவர்கள் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இது எனக்கு 6வது டி20 உலக கோப்பை, ரோகித் சர்மாவுக்கு 9வது டி20 உலக கோப்பை என்று என்று விராட் கோலி உணர்ச்சி பொங்க பேசினார்.


2010 முதல் இந்திய அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் கோலி, இதுவரை 125 போட்டிகளில் விளையாடி 4,188 ரன்கள் எடுத்துள்ளார். 38 அரைசதங்கள் மற்றும் 1 சதம் எடுத்திருக்கிறார்.


விராட் கோலியின் ஓய்வை தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் டி20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.


இந்திய அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்-டிற்கும் இதுவே கடைசி போட்டியாகும். (LSN)



No comments