Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வாரி வழங்கும் அமெரிக்கா - 50,000 டொன்களுக்கு மேல் என மதிப்பு

 


இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 50,000 டன்கள் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து, இருப்பிரிவுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ போர் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.


காசாவில் இஸ்ரேலிய படைகள் இதுவரை நடத்திய தாக்குதலில் 40,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், போர் தொடங்கிய 2023 அக்டோபர் 7ம் திகதி முதல் கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.


ஊடக தகவல்கள் படி, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை உள்ளடக்கிய 500வது வான்வழி சரக்கு தொகுப்பை இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிறைவு செய்துள்ளது.


அத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை உள்ளடக்கிய 107 வது சரக்கு தொகுப்பையும் கடல்வழியாக டெல் அவிவ்-க்கு வாஷிங்டன் அனுப்பியுள்ளது.



திங்கட்கிழமை இஸ்ரேலிய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்று வரும் போரில் செயல் திறனை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆகியவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (LSN)


No comments