தனது அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விலகியுள்ளார்.
அமைச்சர்களான, மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு ஐக்கிய மக்க்ள சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனையடுத்தே தான் அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார்.
இதேவேளை, தன்னால் இன்று முதுகை நிமிர்த்தி நடக்க முடியும் என்றும், ஏற்படக் கூடிய விளைவுகளை அறிந்தே கடந்த காலங்களில் தான் முடிவுகளை எடுத்ததாகவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (LSN)
No comments