நாட்டில் மீண்டும் சிவில் போர் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள், ரணில் தவிர்ந்த வேறு வேட்பாளர்களுக்கு வாக்களித்தால் இவ்வாறு சிவில் போர் வெடிக்க வாய்ப்பு உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலி பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்காக எவ்வாறான வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், மக்களுக்கு சேவையாற்றிய தலைவராக ரணில் விக்ரமசிங்க மட்டுமே திகழ்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் வெற்றியீட்டும் நோக்கில் ஏனைய வேட்பாளர்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருவதாகவும், எனினும் அந்த வாக்குறுதிகள் நடைமுறைக்கு சாத்தியமற்றவை எனவும் கூறியுள்ளார்.
வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்றுக் கொள்வதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க செய்யக்கூடிய விடயங்களை மட்டுமே எல்லா சந்தர்ப்பங்களிலும் கூறுவார் எனவும், அது ஒரு தலைவரிடம் இருக்கக்கூடிய உயரிய பண்பாகும் எனவும் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
வஜிர அபேவர்தன இந்த சிவில் போர் வெடிக்கும் என்ற கருத்தை பல்வேறு மேடைகளில் தெரிவித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. (LSN)
No comments