Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

குறைந்த கட்டணத்தில் அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் கடவுச்சீட்டு - அமைச்சரவைப் பேச்சாளர் கருத்து


ஒக்டோபர் மாதம் முதல் நவீன கடவுச்சீட்டை குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமென அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.


அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


நீண்டகாலமாக கடவுச்சீட்டு வழங்கும் நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கடவுச்சீட்டு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.



அதற்காக அரசாங்கம் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். புதிய தொழில்நுட்ப டிஜிட்டல் முறைகள் இல்லாமல் சிங்கப்பூர் போன்ற நாட்டிற்குள் நுழையவும் முடியாது.


ஏனைய நாடுகளின் விதிமுறைகளின்படி டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிக்கப்படுகிறது.


சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தப்படி, விலைமனு கோரல் அழைப்புகள் மற்றும் கொள்முதல் ஆகியவை வெளிப்படைத்தன்மையுடன் செய்யப்பட வேண்டும்.



எனவே நீண்ட காலமாக கடவுச்சீட்டு வழங்கிய நிறுவனத்தைத் தவிர வேறு நிறுவனத்திடமிருந்து டிஜிட்டல் கடவுச்சீட்டை பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.


இது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. அந்த நாடுகளின் கடவுச்சீட்டுகளை ஒக்டோபர் மாதம் வரை அச்சிட முடியாது. மேம்பட்ட தொழில்நுட்ப முறைகளின் அடிப்படையில் கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்படுகிறது.



இந்த டிஜிட்டல் கடவுச்சீட்டை விட குறைந்த விலையில் பெற்றுக்கொள்ளக்கூடிய நவீன கடவுச்சீட்டு ஒக்டோபர் மாதம் கிடைக்கும் என அமைச்சரவை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். (LSN)


No comments