Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

சமந்தா பவரிடம் உதவி கோரிய ரணில் - அலி சப்ரி அறிவிப்பு


அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தவர் ரணில் விக்ரமசிங்கவே என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.


மினுவங்கொடையில் இடம்பெற்ற ரணிலால் இயலும் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.



தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“நாடு வீழ்ச்சியடைந்தபோது, நாட்டைப் பொறுப்பேற்க எந்தத் தலைவரும் முன்வரவில்லை. அதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்து சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பொருளாதாரத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டுவந்தார்.


அமெரிக்காவில் உள்ள சமந்தா பவரை தொலைபேசியில் அழைத்து இலங்கைக்கு தேவையான வசதிகளை செய்து தர ஏற்பாடு செய்தார்.


இவ்வருட ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் இத்தகைய சர்வதேச உறவுகளைக் கொண்ட வேட்பாளர் யாரும் இல்லை.


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்றது இந்த நாட்டு மக்களின் அதிஷ்டம். அதன் பலனை இன்று மக்கள் அனுபவித்து வருகின்றனர்.


இன்று நாம் சர்வதேச ரீதியில் முன்னோக்கிச் செல்லும் போது, இரண்டரை வருடங்களில் இலங்கை எவ்வாறு மீட்கப்பட்டது என்று அந்த அந்த மக்கள் கேட்கின்றனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கைக்கு செய்த விடயங்களே, பங்களாதேஷுக்கு இன்று தேவை என்று உலக வல்லரசுகள் கூட கூறுகின்றன.


எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்" என்றார். (LSN)


No comments