Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

ரணிலின் அறிவிப்பை நடைமுறைப்படுத்த முடியாது - எதிர்க்கும் நிதியமைச்சு


ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினத்திற்கு  இரண்டு நாட்களுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் முப்படையினரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த கருத்துக்கு நிதி அமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.


ரணில் விக்ரமசிங்கவின் வாக்குறுதி தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளர் இன்று கருத்து தெரிவிக்கும்போதே இதனை கூறியுள்ளார்.


இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன,


“ஜூலை 8 தரவுகளை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளேன்.


அரசு ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டால், கூடுதல் செலவுக்கு 14,000 கோடி ரூபாய் தேவைப்படும்.


அதை இருபதாயிரமாக உயர்த்தினால் கூடுதலாக 28,000 கோடி ரூபாய் தேவைப்படும். 


பத்தாயிரம் ரூபாவினால் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் VAT வரியை குறைந்தது 21% ஆக அதிகரிக்க வேண்டும்” என்றார். (LSN)



No comments