தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 12 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்குக் கரையை நெருங்கி, புயலாக வலுவடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி ஆழமான காற்றழுத்த தாழ்வு பகுதி திருகோணமலைக்கு கிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய, கிழக்கு, வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மிக அதிக மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தீவின் மற்ற பகுதிகளில் அவ்வப்போது மழை எதிர்பார்க்கப்படுகிறது, சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, மேற்கு, வடமேல், தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். (LSN)
No comments