தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksa), நாடாளுமன்றத்திற்குள் பிரவேசிக்கவுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம்(Sagara Kariyavasam) தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த கட்சிக்கு கிடைத்துள்ள ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தின் ஊடாக நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.
மேலும், இந்த தேர்தல் மக்கள் எடுத்த முடிவினை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், எங்களிடம் மாவட்ட அளவில் இரண்டு நாடாளுமன்ற ஆசனங்களும், தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனமும் உள்ளது என்றும் சாகர காரியவசம் இதன்போது குறிப்பிட்டுள்ளார். (LSN)
No comments