Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வெள்ளத்தில் காணாமல்போன மத்ரஸா மாணவர்கள் சடலங்களாக மீட்பு


வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட மத்ரஸா மாணவர்கள் தேடப்பட்டு வந்த நிலையில் தற்போது வரை இரண்டு மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக இத்தேடுதலில் மேலதிகமாக இராணுவம், விசேட அதிரடிப்படை பங்கேற்றுள்ளதுடன் வெள்ளத்தினால் அடித்து செல்லப்பட்ட உழவு இயந்திரமும் மீட்கப்பட்டுள்ளது.


மீட்கப்பட்ட சடலங்கள் சம்மாந்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.



அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே 11 பேர் பயணம் செய்த உழவு இயந்திம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் அதில் பயணம் செய்தவர்கள் வெள்ள நீரில் அள்ளுண்டு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.


அம்பாறை - மாவடிப்பள்ளியில் உழவு இயந்திரம் வெள்ளத்தில் அடிபட்டு சென்ற சம்பவத்தில் காணமல்போயுள்ள ஆறு மாணவர்களையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


குறித்த ஆறு மாணவர்களை தேடும் பணிகள் இன்று (27.11.2024) இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றன.


கடற்படையினருடன் இணைந்து சமுதாய தொண்டர் அமைப்புகளும் களத்தில் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


காரைத்தீவு - மாவடிபள்ளி பகுதியில் உழவு ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.


அதில் 2 மாணவர்கள் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளை பெற்று வருகின்றனர். 



அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார்.


எனினும், காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை. 


அதேநேரம் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.(LSN)



 




No comments