Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

மீண்டும் வாகன இறக்குமதி - ஓரிரு நாட்களில் நிதியமைச்சின் தீர்மானம்



வாகன இறக்குமதி மீண்டும் அனுமதிக்கப்படும் போது முதல் கட்டமாக பேருந்துகள் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என  இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இன்னும் ஓரிரு நாட்களில் இதற்கான அனுமதி நிதி அமைச்சினால் வழங்கப்படும் என்று தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே(Indika Sampath Merenchige) தெரிவித்துள்ளார். 



வாகன இறக்குமதியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தின் கீழ் கார்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும் இந்த நடவடிக்கை அடுத்த வருடம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 


அத்துடன் பயன்படுத்திய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால் அரசாங்கத்திற்கு அதிக வருமானம் கிடைக்கும்.


மேலும் அந்நிய செலாவணியையும் சேமிக்க முடியும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே சுட்டிக்காட்டினார். (LSN)





No comments