நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவிய கடும் மழையுடன் கூடிய காலநிலை படிப்படியாக குறைந்துள்ள நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்துக்கள் செயற்பாடுகள் தற்போது வரையில் முற்றாகத் தடைப்பட்டுள்ளது.
குறிப்பாக பட்டிருப்பு பெரியபோரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிசசோலை பிரதான வீதி, வவுணதீவு மட்டக்களப்பு நகர் பிரதான வீதி, உள்ளிட்ட பிரதான வீதிகளை ஊடறுத்து வெள்ளநீர் பாய்ந்து வருவதால் அவ் வீதிகளுடனான தரைவழிப் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளன.
எனினும் மிக அவசரத் தேவைகளுக்காக மாத்திரம் ஒருசில இயந்திரப் படகுகள் சேவையில் ஈடுபடுவதையும், உழவு இயந்திரங்களில் மக்கள் பயணம் செய்து நகர்புறங்களுக்கு வந்து தமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களைக் கொள்வனவு செய்துகொண்டு செல்வதையும் காண முடிகின்றது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறிப்பாக மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்த்தினால் 15,900 குடும்பங்களைச் சேர்ந்த 49,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவற்றில் 11,890 குடும்பங்களைச் சேர்ந்த 37,541 பேர் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மட்டக்களப்பின் நிலைமைகள் தொடர்பில் ஐபிசி ஊடகம் மேற்கொண்ட ஆராய்வுகளில் பாதிப்புக்கள் பின்வருமாறு பதிவாகியிருந்தன...
மேலும், யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக, இன்றைய (28.11.2024) காலை 09.00 மணி நிலவரப்படி 13,117 குடும்பங்களைச் சேர்ந்த 44,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
03 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன், 131 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் தொடர்ந்தும் வெள்ள நிலைமை ஏற்பட்டு வருவதனால் அதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.திலகநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீரற்ற காலநிலையின் தாக்கத்தினால் பெரிதும் பாதிப்படைந்துள்ள மட்டக்களப்பு | Severely Affected By Inclement Weather
அவர்களுக்கான காணி உறுதிப் பத்திரங்களையும் வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றபோதே கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார்.
நுவரெலியாவில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலையால் நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை குடாஓயா பகுதியில் (27) இரவு மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் குறித்த வீதியில் போக்குவரத்து ஒருவழியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மண்மேட்டுடன் கற்கள் சரிந்து வீழ்ந்ததில் நுவரெலியா ,கண்டி ,கொழும்பு வழியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். (LSN)
No comments