மதிப்பும் , மரியாதையும், அதி உயர் கௌரவமும் கொண்ட அரசியல் பதவியான பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஆசையிலிருந்து விடுபடுவது எப்படி என்பதனை JVP பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவிடம் பாடம் கற்கவேண்டிய எம் முஸ்லிம் கட்சி சமூக அரசியல்வாதிகள் .
அரசியல் கட்சியின் அங்கத்தவராகவும் கையில் கொஞ்சக் காசும் இருந்தால் எப்படியோ M.P ஆக வேண்டும் அதற்கு என்ன விலையும் கொடுக்கவும் தயார் நிலையில் இருக்கும் நம்மவர்கள் , தப்பித்தவறி MP ப் பதவி கிடைத்தால் மறுகனமே அமைச்சுப் பதவி ஒன்றையும் மற்றும் சலுகைகளையும் பெறுவதற்காக ஆளும் தரப்புக்குத்தாவி சமூகத்தின் அபிலாசைகளை புறந்தள்ளி எதனையும் செய்யும் தயார் நிலையில் இருப்பவர்களே நம்மவர்களில் பலர்.
ஆனால் !
1956.02.26 ல் பிறந்த 68 வயதான
டில்வின் சில்வாவோ
JVP யில் 1978 ல் தனது 22 வது வயதில் அங்கத்தவராக தன்னை இணைத்துக் கொண்டு 46 வருடங்களாக இன்றுவரை ஓய்வின்றி அரசியல் செய்துவருகிறார்.
1987 காலப்பகுதியில் JVP இன் மாவட்டத் தலைவராக நியமிக்கப்படுகிறார்.
1987-89 நடைபெற்ற JVP இன் இரண்டாவது கிளர்சிப் போராட்டத்தில் பங்கு கொண்டமையினால் டில்வின் சில்வா UNP ஆட்சியாளர்களினால்
1987 ல் கைதுசெய்யப்பட்டு
07 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்ட அவர் 1994 ல் விடுதலை செய்யப்படுகிறார்.
விடுதலைய செய்யப்பட்ட அவர் அரசியலை விட்டும் தூரப்படாது பாராளுமன்றம் செல்லமுடியாது என்ற JVP யின் அரசியல் கட்சி யாப்பில் குறிப்பிடப்பட்ட பொதுச் செயலாளர் என்ற பதவியை 1995 ல் கட்சித் தலைமை கோரியமையினால் கட்சியின்
3 வது பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இன்றுவரை முழுநேர ஊழியராக மிகவும் அற்பணிப்புடன் செயற்பட்டு வருகிறார்.
இப்படியான நிபந்தனை முஸ்லிம் அரசியல் கட்சிகளின் யாப்பில் குறிப்பிடப்பட்டு இருக்குமாக இருந்தால் ! முஸ்லிம் கட்சிகள் செயலாளர் பதவிக்கு ஒருவரை நியமிக்க முடியாமலே அப்பதவி வெற்றிடமாகவே இன்றுவரை இருந்திருக்கும் என்பது வேறுகதை.
2004 லே சந்திரிக்கா அம்மையார் அவர்களுடன் UPFA என்ற முன்னணியில் JVP இணக்கப்பபாட்டுக்கு வந்தமையினால் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு கிடைக்கப்பெற்ற தேசியல் பட்டியலுடன் மொத்தமாக 39 பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொண்டார்கள்.
அவர்களில் நான்கு பேர் அப்போது அதிகாரமுள்ள முழு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
டில்வின் சில்வாவை பாராளுமன்றம் செல்லவேண்டும் என்ற பதவி ஆசை அப்போது ஆட்கொள்ளவில்லை மாறாக செயலாளராக தன் பணியை அற்பணிப்புடன் செய்து வருகிறார்.
2024.11.14 ம் திகதி நடைபெற்ற
10 வது பாராளுமன்ற தேர்தலில்
18 தேசியப்பட்டியல் உறுப்பினர்களுடன்
மொத்தமாக 159 பாராளுமன்ற உறுப்பினர்கள் 2/3 அறுதிப் பெரும்பான்மையுடன் தனது கட்சி ஆட்சியமைத்து சாதனை படைத்திருக்கிறது.
தான் 22 வயதில் 1978 ஆண்டு JVP அடிமட்ட ஊழியனாக இணைந்து கொண்ட டில்வின் சில்வா சுமார் தனது 46 வருடங்கள் மாவட்டத் தலைவராகவும் 7 வருடங்கள் சிறைவாசம் 1995 லிருந்து பொதுச் செயலாளர் என பல படித்தரங்களில் கட்சிக்கான கடின உழைப்பின் பின்னர் தனது கட்சியும் , ஒன்றாக பயனித்த ஆரம்பகால பழைய மற்றும் புதிய தோழர்கள் நாட்டை ஆளும் ஜனாதிபதியாகவும் ,அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சரகளாகவும், பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கின்ற போது !
கட்சிக்கா உழைத்து எந்த அரசியல் அதிகாரங்களையும் இதுவரை அனுபவிக்காது தனது அனைத்து
ஆசா பாசங்களையும் அடக்கிக் கொண்டு இன்று வரை கட்சியின் நலனுக்கா தொண்டு செய்து கொண்டிருக்கும் தோழர் டில்வின் சில்வா தான் பாராளுமன்றம் சென்று முழு அதிகாரமிக்க அமைச்சராக இருக்கவேண்டும் என நினைத்தால் ! தனது JVP பொதுச் செயலாளர் பதவியினை அவர்களது அரசியல் யாப்பின் பிரகாரம் இராஜினாமா செய்த பின்னர் அவர் விரும்பியிருந்தால் அரசியல் அதிகாரம் அனைத்தையும் அடைந்து கொள்வதற்கு கட்சியில் யாரும் குறுக்கே நிற்கப்போவதில்லை என்றிருந்த நிலையிலும் கூட அவர்
அந்த பராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சுப் பதவிக்களுக்கு ஆசைப்படவில்லை.
ஆனால்
பிற கட்சிகளின் தேசியப்பட்டியல் ஊடாக எதிர்கட்சி உறுப்பினராக எப்படியாவது பாராளுமன்றம் செல் வேண்டும் என்பதற்காக பலரும் படாதா பாடுபட்டுக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகிறது இருந்தபோதும் அவர்ககளுக்கிடைபே போட்டி காரணமாக கழுத்தறுப்புகளும், கோரிக்கைகளும் , போராட்டங்களும் நடைபெறுக் கொண்டிருப்பதனால் சில கட்சிகள் இன்னும் தேர்தல் ஆணையாளருக்கு தனது கட்சியின் தேசியப் பட்டியல் எம்பிகளின் பெயர்களை அறிவித்துக் கொள்ள முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது.
தோழர் டில்வின் சில்வா அனைத்து பதவி ஆசைகளையும் களைந்து தனது கட்சி ஆட்சி அதிகாரத்தில் உச்சம் தொட்ட வேளையிலும் இந்த நேரம் வரை JVP இன் பொதுச் செயலாளராக அரசியல் அதிகாரமிக்க அமைச்சுப்பதவிகளை
கிஞ்சித்தும் ஆசைவைக்காது தன்னை மெழுகுவர்த்தியாக கட்சிக்கும், நாட்டுக்கும் சேவைசெய்து கொண்டிருக்கும் தோழர் டில்வின் சில்வாவின் தன்னலமற்ற சமூக நலனை என்னவென்று சொல்வது.
அவரோடு ஒப்பிடும் போது நமது முஸ்லிம் சமூக விடுதலை அரசியல் வீரர்கள் எங்கே இருக்கிறார்கள்.
இந்த பதவி ஆசை காரணமாகவே
எமது முஸ்லிம் கட்சித் தலைமைகளினால் 1989-1993 வரை 05 வருடங்களே எதிர்க்கட்சியில் அமர்ந்து சமூக உரிமை அரசியல் செய்ய முடிந்தது.
பின்னர்
1994 ல் அமைச்சர்களானார்கள்
உரிமை அரசியல் மறக்கடிக்கப்பட்டு அபிவிருத்தி அரசியலை தேர்வு செய்தார்கள் ,
2000 ல் தலைவர் அஷ்ரபின் மரணத்தின் பின்னர் தலைமைத்துவப் போட்டி ஆரம்பமானது.
10 த்தோடு 11 ஒன்றாக உதயமாகிறது . இதன் தெடராக ஊருக்கு ஒரு கட்சி வந்தாலும் ஆச்சரயப்படுவதற்கில்லை.
தலைவர்களும் பதவியில் ஆசை கொண்டிருப்பதனை அறிந்து கொண்ட நாம் அனுப்பிய எமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி ஆசை மற்றும் ஆட்சியாளர்களின் சலுகைகளை பெற்றுக் கொள்வதற்காக கட்சித் தலைமைகளுடன் முறன்பட்டுக் கொண்டு முஸ்லிம்களுக்கு பாதகமான எல்லா சட்டமூலங்களுக்கும் கைதூக்கி கொளுத்து , செளிப்படைந்து நாறிப்போய் கிடக்கிறார்கள்.
எப்போது
எம் சமூக விடுதலை அரசியல் வாதிகள் என தங்களை சொல்லிக் கொள்பவர்கள் ,
பதவி என்ற பேராசையிலிருந்து
விடுபட்டு , தூரப்படுகிறார்களோ !
அப்போது தான் சமூகம்
ஒற்றுமைப்பட்டு சமூக நல உரிமை அரசியலை அவர்களால் செய்யமுடியுமாக இருக்கும்.
சமூக அரசியல் செய்ய விரும்புவோர்கள்
முடியுமானால்
தோழர் டில்வின் சில்வாவின்
" பதவி ஆசையை துறந்து அரசியல் செய்வது எப்படி "
என்ற அவரது அரசியல் வரலாற்றை படித்தே ஆகவேண்டியுள்ளது.
-பாலமுனை எம்.ஜே.எம்.நிஃமத்துல்லா-
No comments