Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

தொடரும் அரிசி தட்டுப்பாடு, நிலவரம் இதுதான்

 



ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அரிசி இறக்குமதியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் அண்மையில் வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுடன் இறக்குமதியாளர்கள் கலந்துரையாடல் ஒன்றையும் நடத்தியிருந்தனர்.


நாடு அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக அரிசியை இறக்குமதி செய்வதற்கு தாங்கள் தயாராக உள்ளதாக இறக்குமதியாளர்கள் அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளனர்.


அரிசி தட்டுபாடு! அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | The Srilanka Imports Rice




அதன்போது ஒரு கிலோ அரிசிக்கான இறக்குமதி வரியை 65 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக குறைக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


அரிசி இறக்குமதிக்கு சந்தர்ப்பம் வழங்கினால் 15 நாட்களுக்குள் சந்தையில் நாட்டு அரிசிக்கான தட்டுப்பாட்டைக் குறைக்க முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அரிசி தட்டுபாடு! அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை | The Srilanka Imports Rice


இந்தநிலையில், அரிசி இறக்குமதிக்கான விலை மனு கோரப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளிடம் கொள்வனவு செய்வதற்கு போதியளவு நெல் கையிருப்பில் இல்லை எனவும் இறக்குமதியாளர்கள் அமைச்சரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.    (LSN)





No comments