Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

முன்நாள் அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் அநுர அரசு


கடந்த அரசாங்கங்களில் மந்தகதியில் விசாரிக்கப்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள், அரச உயர் அதிகாரிகள் தொடர்பான பல வழக்குகள் தொடர்பில் புதிய முறையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.


குற்றப் புலனாய்வு திணைக்களம், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உள்ளிட்ட விசேட பொலிஸ் பிரிவுகள் இது தொடர்பில் நடவடிக்கை தீர்மானித்துள்ளன.


அதற்கமைய, குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் விசேட பொலிஸ் பிரிவின் அதிகாரிகள் இது தொடர்பான வழக்கு கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை தற்போது நீதிமன்றங்களில் இருந்து பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.



கடந்த காலங்களில் பல அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பொது சொத்துக்களை அபகரித்ததாகவும், லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இது தொடர்பான பல வழக்குகள் தற்போது கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.


சில விசாரணைகளை முடித்துவிட்டு சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக விசாரணை கோப்புகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி பல வருடங்கள் கடந்துள்ளது.



இந்த நிலையில் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் கிடைக்கப்பெறாத பல வழக்குகள் உள்ளதாக நீதிமன்றில் தெரியவந்துள்ளது.


குற்றப் புலனாய்வுத் திணைக்களம் உள்ளிட்ட விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசாரணைகள் நடத்தப்பட்டது.


அந்த வழக்குகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக சட்டமா அதிபருக்கு உடனடி அறிவுறுத்தல்களை வழங்குமாறு நீதிமன்றங்கள் சட்டமா அதிபருக்கு பல நினைவூட்டல்களை அனுப்பியுள்ளன. (LSN)





No comments