குரங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் அழிவை கட்டுபடுத்தும் வகையில் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடி வேலைத்திட்டம் மாத்தளையில் இன்று ஆரம்பமாகிறது.
பல கால்நடை மருத்துவர்களின் ஆதரவைப் பெற்ற இந்தத் திட்டத்திற்கு விவசாய அமைச்சு ரூ. 4.5 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளது.
குரங்குகள் கிரிதலேயில் உள்ள வனவிலங்கு ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவை கருத்தடை செய்யப்பட்டு, பின்னர் மீண்டும் காட்டுக்குள் விடப்படும்.
விவசாய அமைச்சு இத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்த உத்தேசித்துள்ளது.
No comments