யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமையப் பெற்றுள்ள பள்ளிவாசல் எல்லைக்குற்பட்ட பகுதியினுள் சிரமதான நிகழ்வும் மரம் நடுகின்ற நிகழ்வும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தொழில்நுட்ப பீட மாணவர்கள், விவசாய பீட மாணவர்கள், பொறியியல் பீட மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு மரங்களை நட்டி வைத்தனர்.
இதன்போது சுமார் 35 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(அகமட் கபீர் ஹஷான் அஹமட்)
No comments