வவுனியாவவுனியாப் பல்கலைக்கழகத்தின் வியாபாரக்கற்கைகள் பீடத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் சந்தைப்படுத்தல்
கழக வருடாந்த பொதுக்கூட்டம் வவுனியா பல்கலைக்கழகத்தின் சூசை ரத்தினம் மண்டபத்தில் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ துறையின் விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்களின் பங்கு பற்றுதலுடன் 2025/12/05 அன்று வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.
இந்த நிகழ்வில் 2025 ஆம் வருடத்திற்கான சந்தைப்படுத்தல் கழகத்தின் சிரேஷ்ட பொருளாளராக விரிவுரையாளர் திரு. எஸ். சிவனேந்திரா அவர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் கழகத்தின் தலைவராக புத்தளத்தைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.ஷவ்வாப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு பிரதித் தலைவராக பீ.ஜி.கே. நெத்மினி , செயலாளராக ஜே. ஏ. டி.சன்சலா , பொருளாளராக டி.ஜி.எல். கவிஷாணி, வடிவமைப்பாளராக எல்.எம்.ஆர்.ரத்சர, உதவி வடிவமைப்பாளராக எம்.எஸ்.எம்.ஹிமாத், நான்காம் வருட மாணவர்களின் பிரதிநிதியாக இசட்.டி.எம்.ஆசிர், மூன்றாம் வருட மாணவர்களின் பிரதிநிதியாக எச்.ஏ.பி.மதுஷிகா மற்றும் இரண்டாம் வருட மாணவர்களின் பிரதிநிதியாக என்.எச்.டி டி. பெரேரா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டார்கள் தெரிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
No comments