Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

எனது உயிரும் உடலும் அநுர அரசாங்கத்திற்கே!! சபையில் அர்ச்சுனாவின் ஆவேசப் பேச்சு




எனது முழு உயிரையும் உடலையும் அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்காக கொடுப்பதற்கு நான் தயாராக இருக்கின்றேன் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(R.Archchuna) தெரிவித்துள்ளார்.



யாழ்ப்பாணத்தை பொறுத்தமட்டில், அரசாங்கம் கொடுத்த நிவாரணங்களை விட புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கொடுத்த நிதி பல மடங்கு அதிகம் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


மேலும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உள்ளிட்ட 159 உறுப்பினர்களுக்கும் என்னால், எனது அறிவால் என்ன உதவி மற்றும் ஆதரவினை வழங்க முடியுமோ அதனை நிச்சயமாக செய்வேன் என்றும் அவர் தெரிவித்தார்.


இதேவேளை, எனது முழு உயிரையும் உடலையும் அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்காக நான் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றேன் எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.  (LSN)




No comments