Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

இலங்கை ரயில்வே பாதுகாப்புப் பணியில் 100 பேருக்கு நியமனம்

 


இலங்கை ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்புப் பணியில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 100 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்னாயக்க தலைமையில் நேற்று (06) நடைபெற்றது.



2019 ஆம் ஆண்டு 303 வெற்றிடங்களுக்கு நடத்தப்பட்ட போட்டித் தேர்வில் முதலில் 178 பேர் தேர்வாகியிருந்தனர். இருப்பினும், இந்த நியமனங்கள் 2022 இல் நிறுத்தப்பட்டன. புதிய அமைச்சரவையின் அனுமதியின் பேரில், மீதமுள்ள 100 பேருக்கு இவ்வாறு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. (News.lk)




No comments