Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

யாழ்.மக்களுக்கு பொலிஸார் வழங்கியுள்ள விசேட அறிவுறுத்தல்

 


யாழ். மக்கள் பயப்படத் தேவையில்லை என்றும், பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் எனவும், மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க அறிவுறுத்தியுள்ளார்.


யாழ் நகரில் புத்தாண்டிக்கு முன்னிரவு இளைஞர் ஒருவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதல் தொடர்பாக கேள்வியெழுப்பியபோது மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் இதனை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில்,



“கடந்த வாரத்தில் யாழ். நகரில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்தி இருக்கின்றோம்.


இரண்டு சம்பவங்களையும் குறித்து புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். மேலதிக சாட்சிகளை எடுத்து மிகுதியான சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுள்ளோம்.


இதற்குரிய ஆலோசனைகள் என்னால் உயர் அதிகாரிகளுக்கும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் பொறுப்பதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.


குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைப் பிடித்து குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் 81வது பிரிவின் கீழ் வழக்குத் தாக்கல் செய்து வருகின்றோம். இனிவரும் காலங்களில் குறித்த நபர்கள் அவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக கட்டுக்கோப்பான சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆணையை பெற்று வருகின்றோம்‘‘ என்றார். (Tamilwin)




No comments