Page Nav

Pages

தலைப்புச் செய்திகள்

latest
tamilsolution_ad_alt

வைத்தியர் விவகாரத்தில் மற்றுமொரு நபர் கைது

 


அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் மருத்துவர் தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபரின் சகோதரி மற்றும் மற்றுமொரு நபர், நேற்று (12) இரவு கல்னேவ, நிதிகும்பாயாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


37 வயதுடைய சகோதரி மற்றும் 27 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேகநபர் மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் பேரில் அவரது சகோதரி கைது செய்யப்பட்டுள்ளார்.



இதேவேளை மருத்துவர் தவறான முறைக்குட்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபரால் திருடப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசியை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இதேவேளை, குறித்த பெண் மருத்துவரை தவறான முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (13) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.  (LSN)


No comments