Local News

இன்றும் இடியுடன் கூடிய மழை தொடரலாம்

மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய சில பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் எதிர்பார்க்கப் படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகமானது அதிகரித்துக் காணப்படும் என்பதுடன் அனர்த்தங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கபட்டுள்ளது. இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 6 மாவட்டங்களுக்கு விடுக்கபட்டுள்ள மண் சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது. இதற்கமைய, கொழும்பு, காலி, களுத்துறை, மாத்தறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, பெய்துவரும் தொடர் மழை காரணமாக அத்தனகலு ஓயா, களு கங்கை மற்றும் களனி கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளமையினால் அதனை அண்மித்துள்ள தாழ் நில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு கிங்கங்கை நில்வளா கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனை அண்மித்துள்ள பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (CN)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button