அவுஸ்திரேலிய முல்கிரேவ் அணியின் 2021/22 சுற்றுக்கான சிரேஷ்ட தலைமை பயிற்சியாளராக கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளதாக முல்கிரேவ் கிரிக்கெட் கழகம் அறிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட்டில் சனத் ஒரு கதாநாயகன். 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அதிகபட்ச மதிப்பெண் 340 ஐப் பெற்றிரு்கின்றார். இதேவேளை 445 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ள சனத் 1996 உலகக் கோப்பையில் தொடரின் வீரராக தெரிவாகியிருந்தார். எனவே எங்கள் வீரர்களுக்கு சிறந்த பயிற்சியளிப்பதற்கு சனத் ஜயசூரியாவை எங்கள் அணியில் இணைத்துக் கொள்வதில் நாம் பெருமை கொள்கிறோம் என முல்கிரேவ் கிரிக்கெட் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதேவேளை இலங்கையின் முன்னாள் அணித்தலைவர் டி.எம். தில்ஷான் 2021/22 சுற்றுக்கான முல்கிரேவ் கிரிக்கெட் அணியின் தலைவராக இருப்பார். இந்த சுற்றில் விளையாட சமீபத்தில் ஓய்வு பெற்ற உபுல் தரங்காவும் கையெழுத்திட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.(CW)
With Product You Purchase
Subscribe to our mailing list to get the new updates!
Lorem ipsum dolor sit amet, consectetur.
Related Articles
Check Also
Close
-
துஷ்மந்த சமீர ஆசியக் கிண்ணத்தில் விளையாடுவாரா?August 20, 2022