-நாச்சியாதீவு பர்வீன்- தொடரும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மல்வானையில் உள்ள காந்திவலவ்வ, ஆட்டாமாவத்தை, ஜுகி மாவத்தை, சகீனாபுர போன்ற பிரதேசங்கள் முற்றாகவும், பகுதியளவும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கொரோனா கால பயணத்தடை விதிக்கப்பட்டிருக்கும் இக்காலப்பகுதியில் இந்த அனர்த்தம் பிரதேச மக்களின் மனநிலையை வெகுவாகப் பாதித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தினக்கூலி செய்து வாழும் அதிகமானவர்கள் வாழும் இப்பிரதேசத்தில் பல குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இதேவேளை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஆட்டோ மாவத்தையில் ஊடகவியலாளர் அமீர் ஹம்சா, மற்றும் எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன் ஆகியோரும் வசிப்பது குறிப்பிடத்தக்கது.