in ,

17-19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்கள் சிலர் தனிமைப்படுத்தலில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கண்டி, கட்டுகஸ்தோட்டை பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி மேலதிக வகுப்பொன்றில் பங்குபற்றிய 50 மாணவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடையாத 17 – 19 வயதிற்கிடைப்பட்ட மாணவர்களே குறித்த வகுப்பில் கலந்த கொண்டிருந்ததாகவும் மேலதிக வகுப்பு நடந்த கட்டிடத்திலேயே அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.(CN)

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published.

GIPHY App Key not set. Please check settings

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோர் தொடர்ந்தும் கைது

எதுன்கஹகொடு முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்வு